பதிவு செய்த நாள்
06
ஜன
2017
12:01
கோவை: ஆஸ்தீக சமாஜம் சார்பில், 13வது ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ நிகழ்ச்சியின் நான்காவது நாளான நேற்று, கிருஷ்ணா ருக்மணி கல்யாண மகோத்ஸவ நிகழ்ச்சி நடந்தது. கோவையில் ராதா கல்யாண மகோத்ஸவ நிகழ்ச்சி, கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கி, ஜன., 8ம் தேதி வரை நடக்கிறது. ஆஸ்தீக சமாஜம் சார்பில் கோவையில் ஒவ்வொரு ஆண்டும், ராதா கல்யாண மகோத்ஸவம் நடைபெறும். இந்த ஆண்டு, 13வது ஆண்டாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வி.ஆர்.ஜி.மஹாலில் துவங்கியது.ஜன., 2ம் தேதி, காலை 5:30 மணிக்கு, ராமகிருஷ்ண கனபாடிகள், மகாகணபதி ஹோமத்தை நிகழ்த்தினார். மாலை 6:00 மணிக்கு தோடைய மங்களம், குருகீர்த்தனைகள், அஷ்டபதிபஜனை நடந்தது.ஜன., 3ம் தேதி, உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினர், காலை 9:30 மணிக்கு, ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கினியும், மாலை 3:30 மணிக்கு, மைதிலி ராமநாதன் குழுவினரின் நாராயணீயம் நிகழ்ச்சியும் நடந்தது.
ஜன., 4, உடையாளூர், கல்யாணராம பாகவதரின், கிருஷ்ணலீலா தரங்கினி, கணபதிராமபாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சியும், தியானம், திவ்யநாமம், டோலோத்சவம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.நேற்று, 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. இதில் ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து உடையாளூர் கல்யானராம பாகவதர் குழுவினரின் ஸ்ரீ கிருஷ்ணா ருக்மணி கல்யாண மகோத்ஸவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், இசைப்பிரியர்கள் பங்கேற்றனர்.ஜன., 8ம் தேதி வரை, பக்தி இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.