ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவை நடந்தது. ஆழ்வார்குறிச்சி கீழ கிராமத்தில் வேங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது. கட்டளைதாரர் சங்கரி டீச்சர் முன்னிலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம் ஆகிய வைபவங்களை ரெங்கநாத ஐயங்கார், சம்பத்குமார், நம்பிராஜன் நடத்தினர். மதியம் சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் நடந்தது.இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும், விசேஷ வழிபாடும் நடந்தது.