சூலுார்: சூலுார் மேற்கு மாகாளியம்மன் கோவில் வளாகத்தில், சபரி சாஸ்தா பக்தர்கள் குழுவின், 16ம் ஆண்டு விழா மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. காலை கணபதி வழிபாடு முடிந்து, மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.