வில்லியனுார்: நல்லாத்துார் சொர்ணபுரீஸ்வரர் கோவில் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான நல்லாத்துார் சொர்ணபுரீஸ்வரர் கோவில் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இரவு 7:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகிறது. 11ம் தேதி காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சிவனடியார்கள் திருவெண்பாவை முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 7:30 மணியளவில் ஊஞ்சல் உற்சவமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. இரவு 7:30 பைரவருக்கு வழிபாடு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.