திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி எப்போது கலெக்டர் பார்த்திபன் விளக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2017 01:01
காரைக்கால்: பகவான் கோவிலில் வரும் டிச.,19ம் தேதிதான் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும்,சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோவிலில் இரண்டாரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பஞ்சாங்க முறைப்படி வரும் டிச.,19ம் தேதி காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவிசிக்கிறார். ஆனால் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி வரும் ஜன.,26ம் தேதி சனிப்பெயர்ச்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், டிச.19ம் தேதி அன்றுதான் திருநள்ளாரில் கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறும். வரும் ஜன.26ம் தேதி பக்தர்களுக்கு கோவில் எப்போதும் போல் திறந்து இருக்கும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம்,தம்பிரான் சுவாமிகள், ராஜா சுவாமிநாதன் சிவச்சாரியா உள்பட பலர் உடன் இருந்தனர்.