ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2017 01:01
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பகல்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து (நாச்சியார் திருகோலம்) மோகினி அலங்காரத்தில் அர்ச்சனா மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசிக்க உள் பிரகாரம் மற்றும் வெளிபிரகாரத்தில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆண்டாள் சன்னிதியில், மாரிமலை முழைஞ்சில் என்ற பாசுரத்தின் படி ஆண்டாள் எழுந்தளி சர்வ அலங்காரத்தில் கட்சியளித்தார்.