பதிவு செய்த நாள்
07
ஜன
2017
02:01
சேலம்: திருப்பதி திருமலையில், ஜன.8 நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக, சேலத்தில் இருந்து, இரண்டரை டன் பூக்கள், மாலைகளாக தொடுக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டன.
திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், திருப்பதி திருமலையில் நடக்கும் விழாக்களுக்கு, பூக்கள் தொடுக்கப்பட்டு, அனுப்பப்படுகிறது. ஜன.8, வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதற்காக, சேலம், சங்கர் நகர், வன்னியர் குல சத்ரியர் திருமண மண்டபத்தில், பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், இரண்டரை டன் எடையுள்ள, மேரிகோல்டு, சம்பங்கி, சாமந்தி, அரளி, ரோஜா உள்ளிட்ட பூக்கள், மாலைகளாக தொடுக்கப்பட்டன.
250க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், பூக்களை தொடுத்து மாலைகளாக கொடுத்தனர். அவை, லாரி மூலம், திருப்பதி திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, டிரஸ்டி பாலசுப்ரமணி தலைமையில், பக்தர்கள் செய்திருந்தனர்.