பதிவு செய்த நாள்
07
ஜன
2017
02:01
கருமந்துறை: மழை வேண்டி, பெண்கள், சிறப்பு வழிபாடு நடத்தினர். கருமந்துறை அருகே, சூலாங்குறிச்சி, சக்தி நகரில் உள்ள ஓம்சக்தி கோவில் உள்ளது. அங்கு, கல்வராயன்மலையில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், நல்ல மழை பெய்ய வேண்டும் என, நேற்று, பெண்கள் பலர் சிறப்பு வழிபாடு நடத்தினர். பூஜையின் போது, சில பெண்கள் சாமியாடினர். இதுகுறித்து, மக்கள் கூறுகையில், "ஓம்சக்தி அம்மனிடம் வைக்கும் வேண்டுதல்கள், உடனே நிறைவேறும். பொங்கலுக்குள், நல்ல மழை பெய்யும் என, நம்பிக்கை உள்ளது என்றனர்.