அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2017 12:01
ரிஷிவந்தியம்: திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கத்தில் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு பல்லக்கில் ஆழ்வார் வந்து எதிர் கொண்டு அழைக்க, உற்சவர் அரங்கநாத பெருமாள் வைகுண்ட வாசனாக எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் தோளில் சுமந்தபடி மைய மண்டபம் வழியாக, ஏகாதசி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். கோவிலின் வெளிப்புறத்தில் மாணவிகளின் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் சுவாமி துாக்குவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்ததால், விழுப்புரம் எஸ்.பி., நரேந்திரன்நாயர் தலைமையில், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கீதா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.