ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு, திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வழங்கப்பட்ட பட்டுப்புடவை சார்த்தி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து, கடந்த 1ம் தேதி, ஆண்டாள் சார்த்திய மாலை, கிளி, திருப்பதி கோவிலில், புரட்டாசி பிரம்மோற்சவத்தின் கருட சேவையன்று, வெங்கடாசலபதிக்கு சார்த்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது.இதைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வழங்கப்பட்ட பட்டுப்புடவையை அம்பாளுக்குச் சார்த்த, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.