ஆண்டிபட்டி, ஆண்டிபட்டியில் கம்மவார் உறவின்முறை பெருமாள்சுவாமி கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. வைகுண்ட ஏகாதசி,துவாதசி விழாவை முன்னிட்டு நடந்த மூன்று நாட்கள் விழா விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளல், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருமஞ்சனகுடம் அழைத்து வரப்பட்டு, மாவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நள்ளிரவில் ஸ்ரீமன் நாராயணன் திருப்பாதம் பொருந்திய ஸ்ரீசடாரிக்கு பல அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பஜனை பாடுதல் நடந்தது. துவாதசி சிறப்பு பூஜை, விரதம் மேற்கொள்ளுதல் நிகழ்ச்சிக்குப்பின், விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.