Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி கோவிலில் ஆடல் வல்லானுக்கு ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
திருப்பூர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

12 ஜன
2017
01:01

திருப்பூர்: மங்கலம், அக்ரகாரபுத்துõர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது; சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மங்கலம் அருகே, அக்ராகாரபுத்துõரில், நுõற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த, 3ல், கிராமசாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன; விசேஷ அலங்காரங்களில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம், நொய்யல் கரையில், சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது; தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் ஆகியவை  நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடந்தன. சிவப்பு பட்டு உடுத்தி, மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சக்தி கரகம் கங்கை அடைதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar