சபரிமலை: சபரிமலையில் ஜன12 இரவு பெய்த சாரல் மழையால் பக்தர்கள் சிரமப்பட்டனர். நடப்பு மண்டலமகரவிளக்கு சீசனில் சபரிமலையில் மழை பெய்யாத நிலையில் ஜன12 இரவு திடீர் என்று மழை பெய்தது. ஜன14 மகர ஜோதி தரிசனத்துக்காக ஜன12 முதல் பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக ஷெட் அமைத்து தங்கியிருந்தனர். இவர்களும், திறந்த வெளியில் தங்கியிருந்த இருந்த பக்தர்களும் சிரமப்பட்டனர். சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.