அத்திமாஞ்சேரிபேட்டை சுப்ரமணியர் கோவிலில் தை மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2017 12:01
ஆர்.கே.பேட்டை: வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு, நித்திய பூஜைகளும், கிருத்திகை விழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆடி கிருத்திகையில், பக்தர்கள் காவடிசெலுத்துவதும் உண்டு. இந்த கோவில் புனரமைப்பு பணிகள், ஓராண்டாக நடந்து வருகின்றன. புதிதாக பளிங்கு கற்கள் பதித்து, கோவிலுக்கு புது வண்ணம் பூசப்பட்டுள்ளது.மேலும், வாயிற் கதவுகளை புது பொலிவுடன் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் தை மாதம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.