பதிவு செய்த நாள்
13
ஜன
2017
12:01
நாமக்கல்: நாமக்கல், ரங்கநாதர் கோவில், வைகுண்ட ஏகாதசி விழாவில், சிறப்பு கட்டண தரிசனம் மூலம், ஐந்து லட்சம் ரூபாய் வசூலானது.
நாமக்கல், ரங்கநாதர் கோவிலில், கடந்த, 8ல், வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசல் வழியாக, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, வி.ஐ.பி., பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டது. அதனால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்து அறநிலையத்துறை அலுவலகம் சார்பில், சிறப்பு கட்டண தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதித்தனர். அதற்காக, பக்தர்கள் கூட்டத்தை, மூன்று பிரிவுகளாக பிரித்து, தர்மதரிசனம்,
20 ரூபாய் தரிசனம், 50 ரூபாய் தரிசனம் என பிரிக்கப்பட்டு, ரசீதுகள் விற்பனை செய்யப்பட்டன. அதில், 20 ரூபாய் தரிசனத்தில், ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, எட்டு ரூபாய்; 50 ரூபாய் ரசீது, மூன்று லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய்; அர்ச்சனை டிக்கெட், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானதாக,
கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.