கோசாலையில் கோமாதா பூஜை: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 02:01
மொடக்குறிச்சி: பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோசாலையில் கோமாதா பூஜை நடந்தது. இதில், திரளான மக்கள் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி தாலுகா, சாவடிப்பாளையத்தில் கோசாலை இயங்கி வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகளை ஜெயின் மற்றும் இந்து சமூகத்தினர் அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்படுகின்றன. மாட்டுப் பொங்கலை ஒட்டி, கோசாலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, மாடுகளுக்கு கோமாதா பூஜை நடத்தபட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், சுண்டல், கரும்பு இலவசமாக வழங்கப்பட்டது.