விவசாயிகளுக்கு பாதபூஜை : மரியாதை செய்த பூ வியாபாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2017 01:01
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு பூ வியாபாரி குடும்பத்துடன் பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினார். நிலக்கோட்டை பூ மார்க்கெட் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தினமும் 100 டன்களுக்கு மேல் பூக்கள் விற்பனையாகிறது இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் பயன் பெறுகின் றனர்.இப்பகுதியில் விளையும் மல்லிகை, செண்டு, மரிக்கொழுந்து, பிச்சி பூக்கள் சாறு நிறைந்து இருப்பதால் சென்ட் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவையாக உள்ளன. நல்ல ஈரப்பதத்துடன் இருப்பதால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.இதனால் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் உழவர் தினமான நேற்று, செங்கட்டான்பட்டியைச் சேர்ந்த பூ வியாபாரி பாண்டி, தனது மனைவி, குழந்தைகளுடன் விவசாயிகளுக்கு பாதபூஜை செய்தார். பாண்டி கூறுகையில், “ லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் பெறும் ஐ.டி., நிறுவன இளைஞர்கள் விவசாயத்திற்கு திரும்புகின்றனர். மற்றொரு பக்கம் விவசாயம் செய்வோரில் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த பூ மார்க்கெட் மூலம் பல ஆயிரம் பேர் பலன் அடைகிறோம். இதற்கு மூல காரணமே விவசாயிகள் தான். அதனால் அவர்களை கவுரவிக்க வேண்டும் என எண்ணி வியாபாரிகள் சார்பில் பாதபூஜை செய்தேன். விவசாயிகள் தினம் என்பதெல்லாம் இப்போது ஏற்பட்டது. நமது பாரம்பரியம்பத்தில் அறுவடையை போற்றும் பொங்கல் பண்டிகை தான் உள்ளது. அதனால் உழவர் திருநாளில் பாதபூஜை செய்தேன்” என்றார்.