திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில்‚ நாளை தீர்த்தவாரி நடக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார்‚ ஆண்டு தோறும், தென்பெண்ணையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதனையடுத்து இந்தாண்டு, திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையார் இன்று புறப்பட்டு‚ பாதம்தாங்கிகளில், மணலுார்பேட்டையை நாளை வந்தடைகிறார். விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அண்ணாமலையாரை வரவேற்று, தென்பெண்ணை நதிக்கு அழைத்துச் செல்லும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து தீர்த்தவாரி முடிந்து‚ சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ள தால், போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.