பதிவு செய்த நாள்
17
ஜன
2017
02:01
ஊட்டி: ஊட்டி ஐயப்பன் திருக்கோவில் திருவிழா, நிறைவு பெற்றது. ஊட்டி ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின் திருவிழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 10ம் தேதி கணபதி ஹோமம், உஷ பூஜை, முளை பூஜை, பஞ்ச கவ்வியம் ஆகியவற்றுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், கணபதி ஹோமம், உச்ச பூஜையை தொடர்ந்து, தீபாராதனை, அத்தாழ பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன. மேலும், விளக்கு பூஜை, ஐயப்ப சுவாமியின் திருத்தேர் வீதி உலா, செண்டை மேளம் முழங்க நடந்தது. பள்ளிவேட்டை, ஹரிவராஸனம் ஆகியவை இடம் பெற்றன. மகர ஜோதி வழிபாட்டில், ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், கோவிலில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு தீப வழிபாடு நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்ப பஜனை சபா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.