கரூர்: உறியடி விழா கமிட்டியாளர்கள் சார்பில், பண்டரிநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. கரூர், பண்டரிநாதசுவாமி கோவிலில், பண்டரிநாத சுவாமி, ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, பக்தர்கள் சுவாமிக்கான சீர்வரிசையை கொண்டு சென்றனர். தொடர்ந்து, கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. விழாவை, பண்டாரிநாதசுவாமி கோவிலின் உறியடி விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.