பதிவு செய்த நாள்
19
அக்
2011
11:10
ஈரோடு: ஈரோடு திண்டல் முருகன் கோவிலில், அக்டோபர் 27ல் சூரசம்ஹாரம் விழா துவங்குகிறது.ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு, சூரசம்ஹாரம் விழா துவங்குகிறது. அன்று காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம் ஆகியவை நடக்கிறது. 28ம் தேதி காலை 9 மணிக்கு, யாகபூஜை, அபிஷேகம், தீபாராதனை, 29ம் தேதி காலை 9க்கு, ருத்ரபாராயணம், சங்காபிஷேகம், யாகபூஜை, 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனை, 31ம் தேதி காலை 9 மணிக்கு யாகபூஜை, 10 மணிக்கு பால் அபிஷேகம், பால்குட கிரிவலம், பகல் 12.10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 10.30க்கு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. நவம்பர் 1ம் தேதி காலை 8.30 மணிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. பகல் 12.10 மணிக்கு மேல், திருக்கல்யாண விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் தனபாலன், செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.