திண்டுக்கல்: புனிதர் என, அறிவிக்கப்பட்ட தொன்போஸ்கோவின் கை எலும்பு பொருத்தப்பட்ட மெழுகுச்சிலை, திண்டுக்கல் வந்தது. இத்தாலியில் பிறந்த தொன்போஸ்கோ, கத்தோலிக்க குருவாக இருந்து, ஏழை, அனாதை சிறுவர்களுக்காக பணி செய்தார். இவரது கை எலும்பு பொருத்தப்பட்ட மெழுகுச்சிலை திண்டுக்கல் வந்தது. கிழக்கு மரியநாதபுரம் தொன்போஸ்கோ மக்கள் கல்லூரி, திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. பாதிரியார் மெல்கிலாரன்ஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாலை 6 மணிக்கு சவேரியார்பாளையம் ஆலயத்தில், திண்டுக்கல் பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. மறைமாவட்ட முதன்மை குரு ஆரோக்கியசாமி, பாதிரியார் ஜெரார்டு பிரிட்டோ, ஜோடேனியல் பங்கேற்றனர்.