பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
தாரமங்கலம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், உலக மக்கள் நலன் வேண்டி, சனிப்பெயர்ச்சி யாகம், நேற்று முன்தினம் நடந்தது. வாசன் பஞ்சாங்க ரீதியாக, நேற்று முன்தினம் மாலை, 7:31 மணிக்கு, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு, சனி பகவான் பெயர்ச்சியானார். இதை முன்னிட்டு, உலக மக்கள் நலமுடன் வாழவேண்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், சனிப்பெயர்ச்சி யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம், அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.