பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், பாதயாத்திரை குழு சார்பில், 15ம் ஆண்டு தைப்பூச காவடி விழா நடந்தது. குமாரபாளையம், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, ராஜாஜி நகர், வலம்புரி விநாயகர், பாலசெல்வகுமரன் கோவிலில், பழநி பாதயாத்திரை குழு சார்பில், 15ம் ஆண்டு தைப்பூச காவடி விழா, கடந்த, 22ல் துவங்கியது. அன்று, கணபதி பூஜை செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்த குடங்களுடன் திருவீதி உலா நடந்தது. நாள்தோறும், சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை, சிறப்பு பஜனைகள் நடந்து வருகின்றன. நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
* குமாரபாளையம், அக்ரஹாரம் லக்ஷ?மிநாராயண சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள காசி விசாலாட்சி, உடனமர் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு வஸ்திர தானம், பிரசாதம் மற்றும் அன்னதானம் நடந்தது.