பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
சூலுார்: முத்துக்கவுண்டன்புதுார் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், பிப்., 3ம் தேதி நடக்கிறது. சூலுார் அடுத்த, முத்துக்கவுண்டன்புதுார் அரியபிராட்டி அங்காளம்மன் கோவில், 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் குண்டம் மற்றும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு, முன் மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா வரும், பிப்., 1ம் தேதி காலை, 9:45 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து முதல் கால ஹோமம் நடக்கிறது. வரும், பிப்., 3ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நான்காம் கால ஹோமம் நடக்கிறது. காலை, 6:30 மணி முதல், 7:30 மணிக்குள் பரிவாரங்கள், விமானம் மற்றும் அங்காளம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது.