பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
சூலுார்: பள்ளபாளையம் ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில், குருபூஜை மற்றும் ஆண்டு விழா நேற்று நடந்தன. சூலுார் அடுத்த, பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில், 71வது ஆண்டு விழா, ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருபூஜை விழா மற்றும் விவேகானந்த கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி, 25வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தன. காலை, 6:30 மணிக்கு சிறப்பு ஆரத்தியுடன் விழா துவங்கியது. ஸ்ரீராமகிருஷ்ணர், சகோதரி நிவேதிதா, சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரின் திருவுருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்தன. ராமகிருஷ்ணர் ஹோமம் மற்றும் ஆரத்தியை மீராபுரி மாதாஜி, வித்யாபுரி மாதாஜி ஆகியோர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து இசை நிகழ்ச்சி, கீதா பஜன் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் நடனமாடினர்.