பதிவு செய்த நாள்
20
அக்
2011
10:10
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை கால பைரவர் கோவிலில் இன்று (அக்.,20) அஷ்டமி சிறப்பு பூஜை நடக்கிறது.காலை 6 மணிக்கு ஸ்வாமிக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், அதிருத்ரயாகம், தொடர்ந்து 64 வகையான அபிஷேகமும், ராஜ அலங்காரமும், ஆயிரத்து எட்டு அர்ச்சனை, நான்கு வேத பாராயணம், 28 ஆகம ஆயிரத்து எட்டு அர்ச்சனைகளும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.இரவு 10 மணி முதல் அதிகாலை 12 மணி வரையில் குறிஞ்சி பூஜையும், யாகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கிருபாகரன் குருக்கள் மற்றும் தமிழக, கர்நாடகா மாநில பக்தர்கள் செய்து வருகின்றனர்.