மதுரை மீனாட்சி அம்மன் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2017 11:01
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா பிப்., 9ல் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்ப உற்சவம் பிப்., 9 வரை நடக்கிறது. இந்நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் இரு வேளைகளிலும் சித்திரை வீதிகளில் புறப்பாடாகி வீதி உலா வருவர். முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் பிப்., 9ல் அதிகாலை அம்மனும், சுவாமியும் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுவர்.இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 8:00 மணியளவில் எழுந்தருளுவர். வாண வேடிக்கைகளும் நடக்கும்.அன்று மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். அந்த நாளில் வெளியூர் பக்தர்களுக்காக ஆயிரங்கால் மண்டபம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். கிழக்கு கோபுரம் வழியாக வருபவர்கள் காலை 7:00 மணி முதல் மதியம் 12.30 மணி, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். உற்சவ நாட்களில் தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் இருக்காது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.