பதிவு செய்த நாள்
30
ஜன
2017
11:01
பழநி:பழநி தைப்பூச விழா, பிப்., 9ல் நடக்க உள்ளது. பிப்., 3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.தைப்பூச விழாவை முன்னிட்டு, பெரியநாயகி அம்மன் கோவிலில், பிப்., 3 காலை, 9:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பிப்., 8 இரவு, 7:30 மணிக்கு முத்துகுமார சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது; இரவு, 9:30 மணிக்கு, நான்கு ரத வீதிகளிலும் வெள்ளி ரதத்தில் சுவாமி உலா வருவார்.தைப்பூச விழாவுக்காக, பிப்., 9 அதிகாலை, 4:00 மணிக்கு, மலைக்கோவில் நடை திறக்கப்படும்; அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் திருத்தேர் ஏற்றம் செய்து, மாலை, 4:25 மணிக்கு தேரோட்டம் நடக்கும். விழாவின் கடைசி நாளான, பிப்., 12ல், தேரடி தெப்பக்குளத்தில், இரவு, 7:00 மணிக்கு தெப்பத்தேர் நடக்கும். தைப்பூசத்தை முன்னிட்டு, 7 முதல், 11ம் தேதி வரை தங்கரத புறப்பாடு கிடையாது.