வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயண பெருமாள் கோயிலில் தை அமாவாசை விழாவின் ஒரு பகுதியாக கருடசேவை உற்ஸவம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதணைகளுடன் திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலையில் திவ்யநாம வழிபாட்டுடன் சுவாமிக்கும், கருடாழ்வாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெருமாள் ராஜாங்கசேவையில் கருடாழ்வாரின் மீது அமர்ந்தார். அதனை தொடர்ந்து சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயிலை சென்றடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து மைய மண்டபம் கொண்டு சென்றனர். கோயில் பக்தசபா நிர்வாகிகள், செயல் அலுவலர் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்தனர்.