பதிவு செய்த நாள்
30
ஜன
2017
12:01
செங்கல்பட்டு: செட்டிப்புண்ணியம், ஸ்ரீ யோக ஹயக்கிரிவர் சுவாமிக்கு, வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தில், தேவநாத சுவாமி கோவிலில், கல்விக் கடவுளாக விளங்கும், ஸ்ரீ யோக ஹயக்கிரிவரப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. இங்கு, யோக ஹயக்கிரிவரப் பெருமாளை வேண்டி சிறப்பு வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை, மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும், ஆண்டுதோறும், நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, நேற்று காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை, வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை நடைபெற்றது. அதன் பின், காலை, 11:00 மணிக்கு, சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம், எழுதுபொருட்களை வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம் இன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். வண்டலுார் காவல் துணை கண்காணிப்பாளர், முகிலன் தலைமையில், போலீசார் பாதுாகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.