தான்தோன்றிமலை கோவிலில் திருடப்படும் கிரானைட் கற்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2017 12:02
தான்தோன்றிமலை: தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண கோவிலில், கிரானைட் மற்றும் மார்பிள் கற்கள் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டாடினர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: தான்தோன்றிமலை வெங்கட்ரமண சுவாமியை தரிசிக்க, சனிக்கிழமை மட்டுமல்லாமல் வாரந்தோறும் பல்வேறு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கிறனர். தற்போது, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருவதால், கோவில் வளாகத்தில் கருங்கற்கள், மார்பிள், கிரானைட் கற்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றை, இரவில் மர்ம நபர்களால் ஒவ்வொன்றாக திருடப்பட்டு வருகிறது. இரவு நேர பாதுகாவலர் மற்றும் போலீசார் இருந்தும் பயனில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, கோவில் இணை கமிஷனர் சூர்ய நாராயணன் கூறுகையில், கிரானைட் கற்கள் மற்றும் மார்பிள் கற்களை திருடப்படுவதாக இதுவரை புகார் வரவில்லை. இருப்பினும் பாதுகாப்பை பலப்படுத்த விரைவில் ஏற்பாடு செய்யப்படும், என்றார்.