பதிவு செய்த நாள்
02
பிப்
2017
12:02
இடைப்பாடி: திருப்பதிக்கு, மூன்று டன்னுக்கும் மேற்பட்ட பூஜை பொருட்கள், லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. திருமலை ஏழுமலையான் சுவாமிக்கு, நாளை, ரதஸப்தமி சிறப்பு பூஜை நடக்கிறது. அதற்கு தேவையான செவ்வந்தி, துளசி, மல்லிகை, ரோஜா, மரிக்கொழுந்து, வாடாமல்லி, செவ்வரளி ஆகியவை, கொங்கணாபுரம் ஸ்ரீமன் நாராயணநித்ய புஷ்ப கைங்கர்ய சபா மூலம், கன்னந்தேரியில் உள்ள முருகன் கோவிலில் இருந்து, நேற்று மாலை, திருமலைக்கு அனுப்பப்பட்டது. அதில், மூன்று டன் பூக்கள், கோழிக்கொண்டை, வெள்ளரளி, கரும்பு என, நான்கு டன்னுக்கு மேற்பட்ட பூஜை பொருட்களை, கொங்கணாபுரம் சந்திரசேகர் தலைமையில், சுற்றுப்பகுதிகளில் இருந்து, லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது. சேலம், சின்னதிருப்பதி, சங்ககிரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், கொங்கணாபுரம் வந்து, பூக்களை தொடுத்து கொடுத்தனர்.