பழநி:திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, பழநி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தைப்பூச பக்தர்களுக்கு சட்ட உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. பழநியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சட்ட உதவி மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி முரளிசங்கர் திறந்துவைத்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி அசோகன், சட்டப்பணிகள் குழு செயலாளர் விஜயகுமார், பழநி சார்புநீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். தைப்பூச விழாவுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அவர்களுக்கு தேவையான சட்டஉதவிகளுக்கு இம்மையத்தை அணுகலாம். துவக்க விழாவில் நீதிபதிகள் பிரியங்கா, பிரியா, மணிகண்டன் மற்றும் பழநி வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.