பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
திருத்தணி: ஊராட்சியில் புதிதாக கட்டிய கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று மாலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கங்கையம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று மாலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில் இரண்டு யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, முதல்கால பூஜைகள் நடந்ததன. இன்று, காலை, 7:30 மணி முதல், காலை, 9;00 மணிக்குள் புதிதாக அமைக்கப்பட்ட மூலவர் அம்மன் சிலைக்கும், விமானத்திற்கும் கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.