நத்தம் மாரியம்மன் மாசித்திருவிழா பிப்., 27 ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2017 02:02
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா வரும் பிப்., 27 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டு தோறும் நடக்கும் நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா மதுரை, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்ட அளவில் பிரபலமானது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிப்., 28 அன்று கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புக்கட்டி பக்தர்கள் விரதம் துவங்குவர். அன்று முதல் தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். மார்ச் 12 அன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நட்ககிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 14 அன்று கழுமரம் ஏற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். மறுநாள் பூப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.