திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அருகே, க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி அய்யப்பன் கோவிலில், கடந்த, 1990ல் பூமியில் கண்டெடுக்கப்பட்ட அய்யப்பன் சிலையை பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆங்கில முதல் தேதியான, நேற்று முன்தினம் இந்த கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் ஆதி அய்யப்பன் சிலைக்கும், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கும் சிறப்பு அபி ஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு, ஜோதி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 27 அடி உயர மணிகண்டன் சுவாமி பாதத்தில், 1,008 பால் குட அபி ஷேகம் மற்றும் நெய் அபி ஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.