பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
விக்கிரவாண்டி : தொரவி கைலாசநாதர் கோவிலில் வாசற்படி அமைத்து, சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவியில், பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, கருவறை கட்டுமானப் பணி நடக்கிறது. கருவறையில் வாசற்படி (வாசற்கால்) அமைப்பதற்காக, கைலாசநாதருக்கு, நேற்று முன்தினம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வாசற்காலுக்கு அபிஷேகம் செய்து, கருவறையில் நிர்ணயம் செய்யப்பட்டு, கைலாசநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் முன்னின்று செய்தார். விழாவில், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், தொரவி சுப்பிரமணி, கந்தன் நாராயணசாமி, வழக்கறிஞர் சம்பத், ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சங்கர், பாலையா, கனகசபை, சிவனடியார்கள் மாலதி, அர்ச்சனா, அமுதா, கோவிந்தராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.