பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
அம்மாபேட்டை: சேலத்தில் உள்ள, ஐந்து பெருமாள் கோவில்களில், இன்று, திருவீதி உலா நடக்கிறது. சேலத்தில், இன்று நடக்கும் ரதசப்தமி விழாவையொட்டி, அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், வீராணம் பிரிவு லட்சுமி நரசிம்மர், அசோக் நகர் வெங்கடேச பெருமாள் மற்றும் கிருஷ்ணா நகர் சீதா ராமர் ஆகிய கோவில்களில் இருந்து உற்சவர் சுவாமிகள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமெத்தை சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளி, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக, அந்தந்த கோவில்களுக்கு, உற்சவர் சுவாமிகள் புறப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அதேபோல், அணைமேடு, ரேணுகா தேவி அம்மன் கோவிலில், சிறப்பு வளைகாப்பு அலங்காரம் நடக்கிறது. மாலையில், சிறப்பு பூஜை நடக்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.