பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
நாமக்கல்: நாமக்கல் அருகே, சக்தி கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா கோலகலமாக நடந்து. நாமக்கல், ஏ.எஸ்.பேட்டை சக்தி கணபதி கோவில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணி முதல், இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. காலை, 9:45 மணிக்கு, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 10:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றப்பட்டது. காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. நாமக்கல், ராமகிருஷ்ணா மடம் சேவாநந்த மஹராஜ் சுவாமிகள், விழா குழுவினர், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர்.