குளித்தலை: குளித்தலை, பாரதி நகரில், பொது மக்கள் சார்பில், நேற்று காலை கடம்பர்கோவில் காவிரியாற்றில் புனித நீர் மற்றும் பால் குடம் எடுத்து பக்தர்கள் மேளதாளத்துடன் வந்தனர். மாரியம்மன்கோவில் மற்றும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று காலை, 8:30 மணிக்கு செல்வ வினாயகர், பகவதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.