விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஆயந்துார் அரசமரத்தடி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ேஹாமமும், புதிய விக்ரகங்கள் கரிகோல ஊர்வலமும் நடந்தது. கடந்த 2ம் தேதி காலை 9:30 மணிக்கு அரசமரத்தடி செல்வ விநாயகர் கோவில் ஸ்துாபி மற்றும் மூலவர் அரசமரத்தடி நாகர் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.