பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
திருவானைக்காவல் சங்கர மடத்தில், அதிருத்ர மஹாயக்ஞம் இன்று துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது. 17ம் தேதி வரை திருவெண்காடு வேத பாராயண சபா டிரஸ்ட் சார்பில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் உள்ள சங்கரமடத்தில், இன்று முதல், வரும், 17ம் தேதி வரை, அதிருத்ர மஹாயக்ஞம், வேத பாராயணம் நடைபெற உள்ளது. தினமும் காலை, 5:30 மணி முதல், மாலை, 6:30 மணி வரை, மகான்களுக்கு, ஆயுஷ்ய ஹோமம் நடைபெறும். பகல், 12:00 மணி முதல், 1:00 மணி வரை, சமாரதாதனை, அக் ஷதை ஆசீர்வாதங்கள் நடைபெறும். பிப்., 14ல், அம்பாளுக்கு, ருத்ராபிஷேகம் நடைபெறும். ஹோமங்கள் அனைத்தும், வித்வான்கள் தலைமையில் நடைபெறும். யஜுர் வேத சாகையில், கல் வைத்த வாரம் எனும், வேதத் தேர்வு, 15ம் தேதி நடக்கிறது.
பாராயணம்: வரும், 17 காலை, 6:30 மணி முதல், 11:30 மணி வரை, மஹாருத்ர ஜபம் மற்றும் ஹோமம் நடைபெறும். பகல், 12:45 மணி முதல், 2:30 மணி வரை, பூர்ணாஹுதி, தம்பதி பூஜை, மங்கள ஆர்த்தி, வேத வித்வான்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவானைக்காவலில் உள்ள, அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில், தினமும் காலை, 7:00 மணி முதல், 11:30 மணி வரை; மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை, சதுர்வேத பாராயணம் நடைபெறும். - நமது நிருபர் -