வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2017 02:02
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில், 12ம் ஆண்டு தைப்பூசத்திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணிக்கு கணபதிேஹாமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும் நடந்தன. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு விழாக்குழு தலைவர் வள்ளி கண்ணு தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் நாளை மாலை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலிருந்து திருமணசீர்வரிசை கொண்டுவரப்பட்டு, மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிேஷக பூஜையும், காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தைப்பூசத்திருவிழா குழுச்செயலாளர் மயில்கணேஷ், பொருளாளர் சிந்துசெல்வம் உட்பட பலர் செய்து வருகின்றனர்.