பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
திருப்பூர் : திருப்பூர், கூத்தம்பாளையம் பிரிவு, ஜெ.பி., நகரில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோபுரங்கள், பரிவார சன்னதிகள் அமைக்கப்பட்டு, திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக, யாக சாலை பூஜைகள், இன்று துவங்குகிறது. காலை, 7:00 மணிக்கு, கபதி ஹோமம், சுதர்சன, லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடக்கிறது.இன்று மாலை, 4:35 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், தீர்த்தக்குடங்கள் சீர் வரிசை, அம்மை அழைத்தல், கலா கர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, பரிவார சுவாமிகளுக்கு எந்திர ஸ்தாபனம்; மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை; இரவு, 7:00 மணிக்கு, நாதஸ்வர, கபதி தாளம் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 9ம் தேதிகாலை, 7:35 மணி முதல், 9:30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு சீர் வரிசை எடுத்து வருதல், மகா அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.