பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
பொள்ளாச்சி : நெகமம் மாகாளியம்மன் கோவில் மகாகும்பாபிேஷக விழா, பக்தர்களின் ’தாயே’ கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. பொள்ளாச்சி அடுத்து நெகமம் பேரூராட்சி, நாகர் மைதானம் அருகில் உள்ளது மாகாளியம்மன் கோவில். ஊர் பெரியவர்கள் முன்னிலையில், பழமையான இக்கோவில் திருப்பணிகள் சிற்ப ஆகம முறைப்படி நடந்து நிறைவு பெற்றுள்ளது. இதனைதொடர்ந்து, கோவிலுக்கு மகாகும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 3ம் தேதி மங்கள இசை ஒலிக்க, மஞ்சள் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை. கணபதிேஹாமத்துடன் யாக பூஜைகள், தீபாராதனை நடந்தன. நேற்று அதிகாலை யாகசாலை பூஜை நிறைவு பெற்றதையடுத்து, காலை, 6.30 - 7.30 மணிக்குள், விநாயகர், முருகன் மற்றும் மாகாளியம்மனுக்கு மகாகும்பாபிேஷகம் நடந்தது. ஸ்ரீசுமன்கார்த்திக் சிவாச்சாரியார் அதை நடத்தி வைத்தார். பொதுமக்கள் கோபுரகலசங்களை வழிபட்டு, தீர்த்தங்களை பெற்றுக்கொண்டனர்.