மேட்டூர்: குண்டுக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டூர், தங்கமாபுரிபட்டணம் அடுத்த, பெரியார் நகர், சக்தி மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி, அன்னை குழுமம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.