பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
திருத்தணி: கங்கையம்மன் கோவிலில் நடந்த மண்டலாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, மாமண்டூர் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்ட கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 3ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று, மண்டலாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 5 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், உச்சிகால பூஜையும், மாலை, 5:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பஜனை குழுவினரின் அம்மன் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பின், வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், மாமண்டூர், அங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.