ஜலகண்டாபுரம்: பழையூர் சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஜலகண்டாபுரம் அடுத்த, பெரியசோரகை பஞ்சாயத்து, பழையூர் சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 27ல், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம், பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, இரண்டாம் காலயாக பூஜையை தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.