பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த சூளகிரி கோட்டை தெருவில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், 18 படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், கணபதி, அனுமன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, பஞ்ச மாதா, நவக்கிரக தேவதைகள், கருப்பாயி சமேத கருப்பசாமி, கடுத்தசாமி தவகஸ்தம்பம், யோகீஸ்வரர் ஆகிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோவில் கும்பாபி?ஷக விழா, கடந்த, 3ல் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, 9:15 முதல், 10:15 வரை, அய்யப்பன் கோவில் கோபுர கலசங்கங்கள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அஷ்டாபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:30 வரை, 18ம் படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடந்தன.